வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுப்பொதியில் 2 கோடி பெறுமதியுள்ள போதை மாத்திரை!

வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுப்பொதியில் 2 கோடி பெறுமதியுள்ள போதை மாத்திரை!


2 கோடியே 240,000 ஆயிரம் மதிப்புள்ள 4,048 போதை மாத்திரைகளை பரிசுப்பொதியாக பிராண்ஸிலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொதியினை நேற்று இரவு பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு வந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


$ads={2}

கொழும்பு, தெஹிவலையில் வசிக்கும் 37 வயதுடைய பெண்ணின் பெயரில் இந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. குறித்த பெண்பொதியினை எடுப்பதற்காக வரும் வரை சுங்க அதிகாரிகள் காத்துகொண்டிருந்து கைது செய்துள்ளனர்.

சுங்க செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், 'எக்ஸ்டஸி' என்று அழைக்கப்படும் மருந்துகள் பார்சலில் துணியால் செய்யப்பட்டமடிக்கக்கூடிய சப்பாத்து பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

போதைப்பொருட்களை எடுக்க வருகை தந்த பெண் மற்றும் போதை மாத்திரை அடங்கிய பார்சலையும் சுங்க அதிகாரிகள் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பிரிவில் ஒப்படைத்தனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post