கொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்!

கொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்!


இன்றைய தினம் கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட அங்கவீனமான 19 வயதுடைய மொஹமட் மின்ஹாஜ் என்பவருடைய ஜனாஸா இன்று (27) தகனம் செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் 19 வயது அங்கவீனமான மொஹமட் மின்ஹாஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்பது புதிராக உள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர் அவருடைய ஜனாஸா தகனம் செய்யப்பட்டு விட்டது என்றார்.

$ads={2}

மேலும், மரணித்த பின் அவருக்கும் கொரோனா இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னுமொரு PCR பரிசோதனை எடுக்குமாறு குடும்பம் போராடியது. யார் சொல்லியும், எவர் பேசியும் பிரயோசனமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது PCR மாத்திரம் எதிர்மறையாக என்று சொல்லி, முதலாவதை தவறென ஒத்துக்கொள்ளும் மனப்பான்மையுள்ளவர்களா அவர்கள்? என்ற வேதனையில் குடும்பம் 'பெட்டி' கொண்டு வர முடியாது என அடம்பிடித்த நிலையில் இருந்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post