கண்டியில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி !!

கண்டியில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி !!


கண்டி கலஹா பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


$ads={2}

குறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சைகளுக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வத்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
-madawalanews

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post