இந்தியாவில் அறிமுகமான கூகிளின் 'YouTube Short' செயலி!

இந்தியாவின் இருபது கோடி டிக்டாக் பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் கூகிள் நிறுவனம் தனது 'YouTube Short' என்னும் பெயரில் புதிய வீடியோ பகிர்வு செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா நாட்டுடன் நடந்த மோதலையடுத்து டிக்டாக், ஷேர்சாட் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. மேலும் இந்தத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டது டிக்டாக் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் இந்தியாவில் மட்டும் சுமார் இருபது கோடி பயன்பாட்டாளர்களை கொண்டிருந்தது. பின்பு இந்தத் தடையால் சுமார் இலங்கை நாணயம் ரூ.112,000 கோடிக்கும் மேல் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான் மிகப் பெரிய நஷ்டமடைந்தது.

டிக்டாக் பயன்பாட்டிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் மட்டும் களத்தில் இறங்கவில்லை, முன்னிலிருந்தே பேஸ்புக் நிறுவனம் 'ரீல்ஸ்' என்ற இரண்டு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்கு அம்சத்தை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் தற்போது கூகுளின் யூட்யூப் தளத்தில் புதிதாக ஷார்ட்ஸ் வீடியோ பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தியாவிலும் சிங்காரி மித்ரன் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது கூகிள் நிறுவனம் யூடீயூப் ஷார்ட்ஸ் வீடியோ பகிர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 15 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரமுடியும்.

மேலும் யூடீயூப் ஷார்ட்ஸ் தளத்தில் கேமரா மற்றும் வீடியோ எடிட்டிங் வசதிகளும் உள்ளது. பின்பு வெர்டிக்கல் வீடியோக்கள் ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வசதி விரைவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்கப்படுகிறது. இதன் பெயர் அர்த்தமே இந்த பயன்பாடு ஷார்ட் வீடியோ பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

குறிப்பாக டிக்டாக்-ஐ விட ஷார்ட்ஸ் பல மடங்கு பெரியதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, யூட்யூபின் இந்த வீடியோ தளம் பயனர்களுக்குத் தேவையான பாடல்களும், இசையும், திரைப்படங்களின் வசனங்களும் இவர்கள் யூடியூப் தளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில், பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை விற்க முடியாமல் தவித்து வரும் நிலையில், போட்டியாக கூகுள் நிறுவனம் யூட்யூப் ஷார்ட என்ற பெயருடன் களமிறங்கியுள்ளதால், டிக்டாக் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post