வைரலான அரசாங்க அதிகாரி ஒருவரின் பாலியல் லஞ்சம் விவகாரம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

சமூக வலைத்தளங்களில் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் அதிகாரி ஒருவர் பாலியல் லஞ்சம் கோரும் வீடியோ குறித்து வீட்டுவசதி மற்றும் சமூர்த்தி அமைச்சகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு பெண் ஊழியரிடமிருந்து பாலியல் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குறித்த கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் அதிகாரி ஒருவரின் வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்கலில் வைரலாகின.


$ads={1}


சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரால் பதிவு செய்யப்பட்ட வீடியோவே சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்துள்ளது.

இந்த சம்பவம் 2015 இல் நடந்ததாகக் கூறப்படுவதாக கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் பொது நிர்வாகி சந்திரபால திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும், இந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதால், இந்த சம்பவம் குறித்து வீட்டுவசதி மற்றும் சமூர்த்தி அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஊழியர் இது தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரபூர்வமான புகாரும் பதிவு செய்யவில்லை என திஸ்ஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையானது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வீட்டுவசதி மற்றும் சமுர்தி அமைச்சகத்தின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post