மூவருடன் பயணித்த முச்சக்கர வண்டி வீடு மேல் விழுந்து விபத்து!

தலவாக்கலை, குணாநந்தபுர பகுதியில் வீடொன்றின் கூரையின் மீது முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், மூவர் காயமடைந்த நிலையில் லிந்துலை 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (13) மாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது.

ஹட்டன், வட்டவளை பகுதியிலிருந்து தலவாக்கலை குணாநந்த பகுதிக்கு வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பின்னோக்கிச் சென்று குடைசாய்ந்து 30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் கூரை மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியைசெலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் லிந்துலைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தினகரன்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post