ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது!

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது!


பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதினின் படுகொலை தொடர்பாக  கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது.


இந்த வழக்கில் பிரதான சந்தேக நபராக இருந்த கொழும்பு சட்டவைத்திய அதிகாரி (JMO), பேராசிரியர் ஆனந்த சமரசேகர மரணித்ததை அடுத்து குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.


சமர்ப்பிப்புகளை கவனத்தில் கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்தார்.


$ads={2}


நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள ஷாலிகா மைதானத்திற்கு அருகே தனது காருக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பான ஆதாரங்களை மறைத்ததற்காக முன்னாள் கொழும்பு JMO, பேராசிரியர் ஆனந்த சமரசேகர குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post