இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பதவிகள் வழங்கக்கூடாது! வாசுதேவ முணுமுணுப்பு!

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பதவிகள் வழங்கக்கூடாது! வாசுதேவ முணுமுணுப்பு!

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பாராளுமன்றத்தில் பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் அலி சப்ரி இந்த சட்டத் திருத்த வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்த போதே வாசுதேவ இதனை கூறியுள்ளார்.

எனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சரவையில் உள்ள பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அப்போது அமைச்சர் வாசுதேவவின் கருத்தை தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவங்ச, ஒரு நபரை இலக்கு வைத்து அல்லாது கொள்கை ரீதியான காரணத்தை முன்வைத்தே அமைச்சர் வாசுதேவ இதனை கூறியதாகவும் இந்தியாவில் கூட இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரச பதவிகளை வகிக்க இடமளிக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த 20ஆவது திருத்தச்சட்டத்தில் சிறிய குறைகள் காணப்பட்டால், அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடும் என்பதால், திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் பெறலாம் என அமைச்சர் உதய கம்மன்பில யோசனை முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவையில் உள்ள பலர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இதன் காரணமாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு அன்றைய தினமே ஒப்புதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துடன் அன்றைய தினமே அது வர்த்தமானியில் வெளியிட அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.