கொரோனாவினால் பாதித்த இளம் பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர்!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா எனும் பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்பின் ஆறன்முளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெண் தனக்கு நிகழ்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான நௌபல் எனும் நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அவரை பணி இடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post