ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; நாளை முதல் ஆரம்பம்! முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; நாளை முதல் ஆரம்பம்! முழு விபரம்!

வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட 100,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டம் செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு மூலம் முறையான கல்வி மற்றும் திறன்கள் இல்லாமல் வறுமையில் வாடுவோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.

பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வேலை பெறுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 • முறையான கல்வி இல்லாத அல்லது கல்வித் தரம் குறைந்த திறமையற்ற தொழிலாளர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்கள்.
 • விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியில், 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
$ads={1}
 • சமுர்த்தி பெறாமல் சமுர்த்தி சலுகை பெற தகுதியுடைய குடும்பத்தின் வேலையற்ற உறுப்பினராக இருப்பது, அல்லது சமுர்தி சலுகைகளைப் பெறும் ஒரு குடும்பத்தில் வேலையற்ற உறுப்பினராக இருப்பது.
 • வயதானவர்கள், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் அல்லது ஊனமுற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் வேலையற்ற உறுப்பினராக இருப்பது.
 • விண்ணப்பித்த பகுதியில் நிரந்தர வதிவாளராக இருத்தல்.

$ads={1}
yazhnews.com
பயிற்சி திட்டத்திற்கான தேர்வு


 • ஒரு குடும்பத்திலிருந்து மேலே தகுதிகள் கொண்ட ஒரு நபர் மாத்திரமே கருதப்படுவர்.
 • விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு அருகிலுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிக்கான அவர் தேர்வுசெய்த துறையின் அடிப்படையில், அவரது தொழில் திட்டம் முடிவு செய்யப்படும்.
 • பயிற்சித் திட்டம் விண்ணப்பதாரரின் வசிப்பிட பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் அல்லது மிக அருகிலுள்ள பயிற்சி மையத்தில் நடத்த வசதிகள் அமைத்துக்கொடுக்கப்படும்.
 • ஒரு வெற்றிகரமான பயிற்சியைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் அவர் வசிக்கும் பகுதியில் அல்லது மிக அருகிலுள்ள பகுதியில் பணியில் அமர்த்தப்படுவர்.

$ads={1}
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

 • மாத கொடுப்பனவாக, 6 மாத தொடர்ச்சியான பயிற்சித் திட்டத்தின் போது மாதாந்தம் ரூ .22,500 கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, பயிற்சியாளர்களுக்கு தனது சொந்த குடியிருப்புப் பகுதியில் நிரந்தர அரசு பதவி நியமனம் வழங்கப்பட்டு ரூ. 35,000 மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும். 
 • 10 ஆண்டுகளின் திருப்திகரமான மற்றும் தடையற்ற தொழில் சாதனைக்குப் பிறகு ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள்.

yazhnews.com
மேற்கூறிய அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், மேலும் லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் முயற்சிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை உடனடியாக நிராகரிக்கும்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.