களுத்துறை, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் ஹோமாகம ஆகிய மேல் நீதிமன்றங்களில் 600 இற்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவைகளில் காணப்படுவதால் மேலதிக அரச சிரேஷ்ட சட்டத்தரணியை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்பொழுது ஒரு அரச சிரேஷ்ட சட்டத்தணி, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளதோடு சட்ட மா அதிபரின் புதிய தீர்மானத்திற்கு அமைய குறித்த 4 மேல் நீதிமன்றங்களுக்கும் மேலும் அரச சிரேஷ்ட சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்ட மா அதிபரின் தொடர்பாளர் அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
நிலுவைகளிலுள்ள வழக்குகளை விசாரணைகளுக்கு உட்படுத்தி தீர்ப்பினை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.