
குவைத் அமீர் ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-சபாஹ் தனது 91 வயதில் இன்று காலமானார்.
2006ஆம் ஆண்டு குவைத் அமீராகப் பதவியேற்ற அவர் அதற்கு முன்பாக 40 வருடங்களாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவராவார்.
அமெரிக்காவின் வைத்தியசாலையொன்றில் உடல்நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29) அவர் காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜுலை மாதம் அமெரிக்காவின் விசேட மருத்துவ விமானத்தில் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.