பொலிஸாரின் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரின் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!


வீதி ஒழுங்கு நடைமுறையை நாளை (21) முதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்கவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 14 ஆம் திகதி முதல் வீதி ஒழுங்கு நடைமுறை ஒத்திகை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கடைப்பிடிக்கப்படும் வீதி ஒழுங்கு நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும் சாரதிகளை தெளிவுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வாகனக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.


பஸ் முன்னுரிமை தடத்தில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கூடுதல் இடத்தை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அதன்படி 04 மருங்குகளை கொண்ட வீதியின் வலது புறத்தில் உள்ள முதலாம் மற்றும் இரண்டாம் ஒழுங்கைகள் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.


03 மருங்குகளை கொண்ட வீதியின் வலது புறத்தில் உள்ள முதலாம் ஒழுங்கை பஸ்கள் பயணிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


அதில் இரண்டாம் ஒழுங்கையின் இரண்டாம் ஒழுங்கையில் வாகனங்களை முந்திச்செல்ல பயன்படுத்த முடியும் எனவும் இந்திக ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.


வாகன நெறிசல் அதிகம் காணப்படும் இடங்களில் அதாவது ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, பேஸ் லயின் வீதி, ஹய் லெவல் மற்றும் காலி வீதிகளில் வீதி ஒழுங்கு நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.


கடற்படையினரின் Drone கமராக்கள் மற்றும் CCTV மூலம் வீதி ஒழுங்கு நடைமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.