ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரணம் என உறுதியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் பதவியை கருத்தில் கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யார் குற்றவாளி என தீர்மானிக்கின்ற ஆணைக்குழுவிற்கு கட்சிகள் முக்கியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சில சிவில் அமைப்புகளின் நோக்கங்களை மக்கள் அறிந்ததன் காரணமாகவே அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவினை தெரிவு செய்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.