நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நீதி அமைச்சர் முன்வைத்த பல்வேறு கருத்துக்கள்!

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நீதி அமைச்சர் முன்வைத்த பல்வேறு கருத்துக்கள்!


அரசியல் அமைப்பில் புதிதாக முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்தை உருவாக்கும் போது அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 1987ஆம் ஆண்டு இருதரப்பு உடன்படிக்கை குறித்து ஆராயப்படமாட்டாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அரசியல் அமைப்பை உருவாக்குவது நாட்டின் உள் விவகாரமாகும். இந்த நிலையில் 13ஆவது திருத்தம் தொடர்பாக கரிசனை கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் மக்கள் தொகையில் 1 மில்லியனுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர், வளர்ந்த நாடுகளில் 1 மில்லியன் மக்களுக்கு சராசரியாக 200 நீதிபதிகள் உள்ளனர்.

எனவே, இலங்கையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நீதிமன்றங்களில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

$ads={2}

இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து கருத்துரைத்த நீதி அமைச்சர், குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக செயற்படும் புகைப்பட கெமராக்களுடன் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து ஆராயப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாலியல் கல்வியை புகட்டுவதே சிறந்த முன்னோக்கிய வழி என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முஸ்லிம் விவாகரத்து மற்றும் திருமணச் சட்டம் தொடர்பான ஆலோசனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post