அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி?

அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி?

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லா அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்ட இவர், தேசிய காங்கிரஸ் தலைவராக தனித்து போட்டியிட்டும் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதுசார்ந்த விடயம் முடிந்த பின்னர் அல்லது வரவு செலவு திட்டம் முடிந்த பின்னர் இந்த அமைச்சு நியமனம் இடம்பெறும் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post