கடைசியில் தேசியப் பட்டியல் எம்.பி ஆகிறார் ஞானசார?

கடைசியில் தேசியப் பட்டியல் எம்.பி ஆகிறார் ஞானசார?

சர்சைக்குள்ளாகிய எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்மையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கட்சியின் முன்னாள் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் உறுப்பினராக தனது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்மொழிந்தமையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post