கண்டி - பூவெலிகட அனர்த்த சம்பவம்; புகைப்படும் மற்றும் முழு விபரம்!

கண்டி - பூவெலிகட அனர்த்த சம்பவம்; புகைப்படும் மற்றும் முழு விபரம்!


கண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள ஐந்து மாடி  கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.


அனர்த்தத்தில் Travellers Nest ஹோட்டலின் உரிமையாளரும், அவரது மனைவி மற்றும் ஒன்றரை மாத குழந்தையே உயிரிழந்துள்ளனர்.


இந்த ஹோட்டலின் உரிமையார் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.


இன்று காலை 5 மணியளவில் கண்டியில் Sun Ray ஹோட்டலுக்கு அருகில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.


இடிபாடுக்குள் சிக்கிய குழந்தையை காப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். குழந்தையின் தந்தையும் தாயும் சடலங்களாக கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்கப்பட்டனர்.


அதிக மழை பெய்த நிலையில், அந்தப் பகுதியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post