அவதானம்! காய வைத்து முகக்கவசங்கள் மீள் விற்பனை?

அவதானம்! காய வைத்து முகக்கவசங்கள் மீள் விற்பனை?


கொழும்பில் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை முகக்கவசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மீண்டும் பயன்படுத்த முடியாத 3,128 முகக் கவசங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) பிற்பகல் கொழும்பு - கோட்டை கட்டடம் ஒன்றில் முகக் கவசங்கள் கழுவி காய வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் நீல நிறம், வெள்ளை நிறம் மற்றும் KN95 ரக முகக் கவசங்கள் பாரியளவில் காய வை்ககப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மழையில் முகக் கவசம் நனைந்து விட்டதாகவும் அதனை இவ்வாறு காய வைத்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் சந்தேகத்திற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த முகக் கவசங்கள் சீல் வைப்பதற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான மோசடியான செயற்பாடுகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post