பஸ் நிலையத்தில் தங்கும் பெண்ணின் 8 லட்சம் மற்றும் தங்க நகைகள் திருட்டு; கம்பளையில் சம்பவம்!

கம்பளை பஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த ஆதரவற்ற பெண்ணின் பையிலிருந்து 8 இலட்சம் ரூபா பணத்துடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆதரவற்ற நிலையில் பஸ் நிலையத்தில் தங்கியிருந்த பெண் ஒருவரின் அழுக்குப் படிந்த பையை நபர் ஒருவர் திருடியமை தொடர்பாக கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஆச்சரித்துக்குள்ளாகினர்.

யாப்பா குமாரி ஹாமி என்ற ஆதரவற்ற 82 வயது பெண் அண்மைக்காலமாக கம்பளை பஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணின் பரிதாப நிலையைக் கண்ட இ.போ.சபையின் கம்பளை டிப்போவின் முகாமையாளர் குறித்த பெண்மீது அனுதாபம் கொண்டு அங்கிருந்த காரியாலயத்துக்கு அருகில் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார்.

இந் நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை (31) குறித்த பெண் வைத்திருந்த அழுக்கடைந்த பை ஒருவரால் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து டிப்போ முகாமையாளரின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post