குவைத்தில் 46 வயது இலங்கை பணிப்பெண் சித்திரவதையின் பின் மரணம்!

குவைத்தில் 46 வயது இலங்கை பணிப்பெண் சித்திரவதையின் பின் மரணம்!


46 வயதான இலங்கை பணிப்பெண்ணை மரணிக்கும் அளவுக்கு சித்திரவதை செய்ததற்காக குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த பெண் அவரது குவைத் ஸ்பான்சர் மூலமாக உடலில் பலத்த தீ, வெட்டு மற்றும் இதர காயங்களின் தடயங்களுடன் அமிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார், ஆனால் சில மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


மேலும் பணிப்பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, இந்த சித்திரவதை சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என குவைத் நாட்டு ஸ்பான்சர் மற்றும் அவரது மனைவியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


ஒரு முழுமையான அறிக்கைக்கையை பெற அவரது உடல் தடயவியல் துறையினருக்கு  அனுப்பப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post