20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!


20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த குழுவின் அறிக்கை நாளைய தினம் (16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 09 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.