இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி


இந்தியாவில் இருந்து வந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு எண்ணெயை ஏற்றி வந்த கப்பலில் பணியாற்றும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரஜைகளான இவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இது உறுதியானதாக திருகோணமலை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தொற்று தொடர்பான விசேட மருத்துவ அதிகாரி ரி. திலோஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வந்த இந்த கப்பலில் தொழில் புரியும் ஊழியர் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, அதில் பணியாற்றிய ஏனையோருக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டது எனவும் மருத்துவர் திலோஜன் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post