இலங்கையில் மேலதிகமாக மேலும் 10 பல்கலைக்கழகங்கள்!

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களைப் புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post