கணவர் அதிகம் அன்பு வைத்ததால் விவாகரத்து கோறிய பெண்!!

கணவர் அதிகம் அன்பு வைத்ததால் விவாகரத்து கோறிய பெண்!!

தனது கணவர் தன்னிடம் அதிகம் அன்பு செலுத்துவதையும், தன்னுடன் சண்டை பிடிப்பதே இல்லை என்பதையும் காரணம் காட்டி பெண்ணொருவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்

இந்தியா - உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இந்த விசித்திர காரணத்துடன் ஷரீஆ நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார் என அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.

தனது கணவரின் அதீத அன்பை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அப்பெண் கூறியுள்ளார். இத்தம்பதியினர் 18 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எனது கணவர், என்னை திட்டியதில்லை. எந்த விடயத்திலும் என் மீது அதிருப்தி கொண்டதில்லை. இந்த சூழ்நிலை என்னை மூச்சுத் திணறச் செய்கிறது" என அப்பெண் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்ல, "சிலவேளைகளில் அவர் எனக்க்காக சமையலும் செய்கிறார். ஏனைய வீட்டு வேலைகளிலும் உதவுகிறார். நான் தவறு செய்யும் போதெல்லாம் அவர் என்னை மன்னித்து விடுகிறார். அவருடன் சண்டையிட வேண்டுமென விரும்பினேன். எல்லாவற்றிலும் இணங்கிப் போகும் கணவருடனான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை" எனவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணின் விவகாரத்துக் கோரிக்கைக்கான காரணங்களை அவதானித்த நீதிமன்றம் பெரும் வியப்படைந்தது. இப்பெண்ணின் விவகாரத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆனால், குறித்த பெண் அத்துடன் நின்றுவிடவில்லை. அவர் உள்ளூர் பஞ்சாயத்திடம் இப்பெண் நாடினார். எனினும், பஞ்சாயத்தினாலும் இவ்வியடத்தில் எவ்வித தீர்மானத்துக்கு வர முடியவில்லை.

விவாகரத்து கோருவதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என அப்பெண்ணிடம் கேட்டபோது, அவர் இல்லை என பதிலளித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி பெண்ணின் கணவர் இது தொடர்பாக கூறுகையில், தான் எப்போதும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ளுமாறு மேற்படி தம்பதியை நீதிமன்றம் கோரியுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post