
மஞ்சள் பற்றாக்குறையை நீக்குவதற்காக, எதிர்வரும் ஒன்றரை ஆண்டுக்குள் நாட்டில் மஞ்சள் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து இதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சள் தொகையை இலங்கை கடற்படை பறிமுதல் செய்த பல சம்பவங்கள் சமீபத்திய காலங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.