செப்டம்பர் தொடக்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  இலங்கைக்கு வருகை தர அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும், கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆரம்ப கட்ட பட்டியலிலிருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் திகதி குறித்து உறுதியாக தெரியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவது மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் நாடுகள் குறித்து விவாதிக்க இவ்வாரம் ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கு அருகில் குறைந்தது 24 மணி நேரம்  சுற்றுலாப் பயணிகள் தங்கள் PCR பெரும் வரையில் தாமசிக்க ஒரு இடத்தை நிறுவுதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post