குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மதுபோதையில் நேற்றிரவு சேருநுவர சந்திக்கு அருகில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, சேருநுவர, தெஹிவத்த, வேவெல கெதர, அம்பாலே, மெத நுவர பகுதிகளை சேர்ந்த 45 வயதுடைய வீரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் அபேரத்ன, 30 வயதுடைய தனிபல முதியன்சலாகே அரேஸ் ஜெயசிங்க மற்றும் 26 வயதுடைய சமீர சம்பத் பண்டார சகல சூரிய எனத் தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
சந்தேக நபர்களை இன்று மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.