
தேர்தல் முறையில் 128 ஆசனங்களையும் தேசிய பட்டியலில் 17 ஆசனங்களையும் மொத்தமாக 145 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) 2 ஆசனங்கள், பிள்ளையானின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியில் ஒரு ஆசனம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP) யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஆசனம், அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸ் (NC) பெற்றுக்கொண்ட ஆசனம், அதுரலிய ரதன தேரரின் தலைமையிலான அபே ஜன பலவேகய கட்சியின் ஆசனம், என 151 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதில் சேருகிறார்களா என்பதைப் பொறுத்து நிலைமை மேலும் மாறக்கூடும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.