எனது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு பொருளாதார பொதி வழங்குவேன். -சஜித்

எனது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு பொருளாதார பொதி வழங்குவேன். -சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த போவதாக அதன் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருதானை - சுதுவெல்ல பிரதேசத்தில் இன்று (01) நடைபெற்ற இம்முறை பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொலைபேசி சின்னம் வெற்றி பெறும், ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறும். எனது அரசாங்கத்தின் கீழ் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்திய மின்சார கட்டணங்கள் மக்களுக்கு திரும்பிக்கொடுக்கப்படும்.

எனது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு பொருளாதார பொதி ஒன்று வழங்கப்படும். 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். எரிபொருள் விலைகள் குறைக்கப்படும். இந்த நிவாரணங்களை வழங்குவதால் மக்களின் கைகளுக்கு பணம் கிடைக்கும்.

இதனை கொண்டு மக்கள் முதலீடுகளையும் பயன்பாட்டையும், சேமிப்பையும் மேற்கொள்வார்கள். அப்போது சமூகத்தில் பணம் புழக்கத்தில் இருக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர்வடையும். இதனையே நிதி ஊக்குவிப்பு பொதி எனக் கூறுவார்கள். ஏனைய நாடுகள் பொருளாதாரத்தை முன்னேற்ற நிதி ஊக்குவிப்பு பொதிகளை வழங்கும் போது எமது நாட்டில் என்ன நடக்கின்றது எனவும் சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post