மர்மமான முறையில் உயிரிழக்கும் இலங்கையின் சிறைக்கைதிகள்!

மர்மமான முறையில் உயிரிழக்கும் இலங்கையின் சிறைக்கைதிகள்!

ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய சிறைக்கைதிகள் நால்வர்  உயிரிழந்துள்ளதாக  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் பூஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் நால்வர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் பாவணையாளர்களான கைதிகள் மயக்கமுற்று  உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைக்கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய  மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்  மற்றும் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இன்று  கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post