அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இவ்வாண்டுக்கான அரசாங்கத்தின் வருமானம், கடன்களுக்கான வட்டியை மீளச்செலுத்துவதற்கே போதுமானதாக இருக்காது.
இதன்காரணமாக இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசாங்கம் பெற்ற கடன்களை உரிய திகதிக்குள் முழுமையாக மீளச்செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர்மாதத் தொடக்கத்தில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கான தூண்டுதலாக அமைந்ததுடன், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.