இலங்கையில் சடுதியாக உயர்ந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

சற்றுமுன்னர் கத்தார் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 31 பேர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று மாலை ஏற்கனவே 06 பேர் இனம்காணப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் இனம்காணப்பட்டவர்களை சேர்த்து மொத்தமான 37 பேர் என பதிவாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 3,049 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இன்று கொரோனா தொற்றினால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 08 ஆக பதிவாகிய நிலையில், குணப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட 169 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post