வெறும் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெறும் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும் இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதொழுநோய் வைத்தியசாலையாகும்.

தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் வணக்கஸ்தலங்கள் என பலவசதிகளும் இருந்துள்ளது.

மாந்தீவில் 2009 ஆம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அப்போது 13 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேரைத் தவிர அனைவரும் சென்றுவிட்டதாகவும் அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல் தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மூன்று வாக்களர்களுக்கும் பொதுவான நியமங்களே கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் வழமையான வாக்களிப்பு நேரமாகிய 7.00 மணி முதல் 5.00 மணிவரை அவர்கள் வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.