
இன்று மாலை வரை 2,817 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஐந்து பேரே இவ்வாறு தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,514 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 297 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.