
இன்று (11) காலை 11 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கங்கையில் குதித்த பெண், நீரில் மூழ்கிக்கொண்டிருந்த போது பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் உறவுமுறை சகோதரர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
29 வயதுடைய கெமுனு மாவத்தை, வெல்லன்துடுவ, பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தற்கொலைக்கு முயற்சித்த பெண் நபரொருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில் அவரிடம் இருந்து பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நபர் அப்பெண்ணுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
அவமானத்தில் குறித்த பெண் தற்கொலை செயதுக் கொள்ள தீர்மானித்துள்ள நிலையில் அவரின் உறவுமுறை சகோதரர் ஒருவருக்கு கைப்பேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து, குறித்த பாலத்தில் இருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குறித்த உறவுமுறை சகோதரர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக கங்கையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

