எவ்வாறாயினும், ஒரு துணை பிரதமரை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட சுயாதீன ஆணையங்கள் போல் அரசியல் மயமாக்கப்பட்ட வேறு எந்த நிறுவனங்களும் இலங்கையில் இல்லை என்று அவர் இதன்போது மேலும் கூறினார்.