
அத்துடன், எதிரணியிலுள்ள சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தோடு இணைந்தால் எவருக்கும் அமைச்சர் பதவிகளை வழங்க மாட்டோம் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
குறித்த சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் இணையத் தயாராக இருப்பதாக வதந்திகள் வந்தாலும், இதுபோன்ற எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எதிரணியிலுள்ள சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தோடு இணையவுள்ளமை தொடர்பான செய்தி குறித்து ஒரு சிங்கள ஊடகம் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.