கண்டி - திகன மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

கண்டி - திகன மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

கண்டி - திகன பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய தேவையில்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

கண்டி – தலவத்துஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று (29) இரவு 8.30 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அவ்வாறான நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post