
இந்நிலையில் தேசியப் பட்டியலில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராசா கஜேந்திரன், தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67,766 வாக்குகளைப் பெற்றதோடு, அக்கட்சியின் சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலம் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.