நாட்டிலும் HIV தாக்கம் அதிகமாகும் அபாயம்!

உள்நாட்டு இளைஞர்களுக்கிடையே HIV தொற்று படிப்படியாக அதிகரிக்கும் அவதானம் நிலவுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாங்ஜலி ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டார்.

சுமார் 19 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் HIV தொற்றுக்கு உள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், நாட்டினுள் 3,600 HIV தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சுமார் 2,000 பேர் மாத்திரமே சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post