வீதி சமிஞ்சை செயலிழப்பு; கொழும்பில் பாரிய வாகன நெரிசல்!

வீதி சமிஞ்சை செயலிழப்பு; கொழும்பில் பாரிய வாகன நெரிசல்!

இன்று காலை முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டில் பல மணி நேர மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2 மணி நேரத்திற்குள் மின்சார துண்டிப்பு சீர் செய்யப்படலாம் என மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

குறித்த மின்சார துண்டிப்பை சீர் செய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் தற்போதும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மின்சார துண்டிப்பு காரணத்தால் வீதிகளில் இயங்கும் சமிஞ்சை விளக்குகள் செயலிழந்துள்ளதால் கொழும்பு நகர் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post