
விமானத்தில் சுமார் 190 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மலப்புரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (07) வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானம் ஓடுபாதையை விட்டு 30 அடி சரிந்த நிலையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
தற்போது, காலிகட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி, வழமையாக கரிபூர் விமான நிலையத்தில் வானிலை மோசமாக இருந்தால் இது ஒரு டேபிள் டாப் (Table Top) விமான நிலையம் என்பதால் விமானங்களை அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. எனினும், அது குறித்த இந்த விபத்துக்குள்ளான விமானத்திற்கு அவ்வாறு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



#WATCH Kerala: Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard, skidded during landing at Karipur Airport today. (Video source: Karipur Airport official) pic.twitter.com/6zrcr7Jugg
— ANI (@ANI) August 7, 2020