மேலும் பலர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,010 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3,000 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த 10 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 138 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post