இலங்கையில் 3 ஆயிரத்தை தொட்ட கொரோனா தொற்று!

கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 03 பேருக்கும், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் லெபனானிலிருந்து நாடு திரும்பிய 02 பேருக்குமே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ள 126 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post