இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முழு விபரம்!

இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முழு விபரம்!

இலங்கையில் இன்றைய தினம் இதுவரை காலப்பகுதியில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 04 பேருக்கும், பிரித்தானியாவில் இருந்து ஒருவர் மற்றும் லெபனானில் இருந்து நாடு திரும்பிய  ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,995 ஆக உயர்வடைந்துள்ளதுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 07 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி, நாட்டில் இதுவரையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,849 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை 12 பேர் உயிலிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post