சீனாவின் சிவில் விமான சேவை ஷாங்காய்க்கு வரும் மூன்று விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
$ads={1}
அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட், மணிலா, பிலிப்பைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய நாடுகளில் ஒரு வாரமும், இலங்கையில் இருந்து ஷாங்காய் செல்லும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு நான்கு வார தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்த பயணிகள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டமையே இதற்குமுக்கிய காரணம் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
$ads={2}
ஆகஸ்ட் 7 ம் தேதி கொழும்பிலிருந்து சீனாவின் ஷாங்காய் செல்லும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 23 பயணிகள் புதியகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 3 ம் தேதி வந்த எதிஹாட் விமானத்தில் இருந்து 6 பயணிகளும், மணிலாவிலிருந்து சீனா ஈஸ்டர்ன் விமானத்தில் 6 பயணிகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.