கட்டுநாயக்க விமான நிலையம் மீள் திறப்பது தொடர்பான விமான நிலைய தலைவரின் அறிக்கை!

கட்டுநாயக்க விமான நிலையம் மீள் திறப்பது தொடர்பான விமான நிலைய தலைவரின் அறிக்கை!

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கப்பட்டதை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தி அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தினை மீண்டும் திறப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் இந்த வாரத்திற்குள் இறுதிசெய்யவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை (AASL) தலைவர் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.
$ads={1}

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் பின்னர் தயாரிக்கப்படுக் எனவும் அவர் மேலும்தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதினால் மேற்குறிப்பிட்ட பட்டியலினை தயார்செய்வதில் பல சிறமங்கள் ஏற்படுவதாகவும் சந்திரசிரி தெரிவித்தார்.

தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதினால் உறுதியாக பட்டியலிட முடியாமல் இருப்பதாகவும்தெரிவித்தார்.

$ads={2}
வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் விமான நிலையத்தினை திறப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.

இந்தியா மற்றும் ஐக்கிய அமேரிக்க ஆகிய நாடுகளை தவிர்த்து ஏனைய நாடுகளை இப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ளன.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post