அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களை வழமையை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய முதலாம் திகதி முதல் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரம் இனிமேல் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

$ads={1}

அந்த கடிதங்கள் அனைத்தும் மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி இயக்குனர்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அன்றைய தினம் முதல் செயற்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகாலத்தில் சில பாடசாலைகளில் பிற்பகல் 3.30 மணி வரை பாடவிதானங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post