எதிர்க்கட்சி தலைவர் : சஜித் ; பிரதி சபாநாயகர் : ரஞ்சித் !

எதிர்க்கட்சி தலைவர் : சஜித் ; பிரதி சபாநாயகர் : ரஞ்சித் !

9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பாஅபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இன்றைய பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தனமுன்மொழிந்தார்.
$ads={1}

இதனை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார். 

இதனால் புதிய சபாநாயகர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சாவழிமொழிந்தார்.
$ads={1}

இதனால் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் மாலை 03 மணி வரை புதிய பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது!

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post